• Jan 13 2025

இந்த ஆண்டும் வைர மோதிரம் கொடுத்த த.வெ.க தலைவர்! கைகுலுக்கி வாங்கிசென்ற மாணவர்கள்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக தளபதி 69 ஆவது படத்தின் கெட்டப்பிற்கு மாற உள்ள நிலையில், இன்று இடம்பெறும் கல்வி விழாவில் அரசியல் கட்சித் தலைவராக அதே லுக்கில் வந்துள்ளார்.

இன்றைய தினம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் முதல் கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800 மாணவர்களுக்கு பரிசுகளை கொடுத்து வருகின்றார் விஜய்.

இந்த நிலையில், 10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு மாணவர்களுள் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகையோடு, இதில் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடத்தைப் பிடித்த மாணவர்களுக்கு  வைர மோதிரங்களை பரிசாக கொடுத்துள்ளார் விஜய்.


இவ்வாறு பொது தேர்வில் அதிக மதிப்பு எண்களை எடுக்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக நடிகர் விஜய் இந்த பணியை செய்து வருவதோடு, எதிர்காலத்தில் மாணவர்கள் நாட்டை தலைமை தாங்கும் நல்ல தலைவர்களாகவும், தவறான பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கக் கூடாது எனவும் தனது அட்வைஸை வழமை போல கொடுத்துள்ளார்.


மாணவர்களும் விஜயின் அட்வைஸைக் கேட்டு கெட்ட  பழக்கங்களுக்கு ஆளாக மாட்டோம் என்ற உறுதிமொழியையும் எடுத்துள்ளனர். விஜய்யிடம் விருது வாங்கிய அனைவரும் சந்தோஷத்துடன் அவரது கை குலுக்கி நன்றி சொல்லி சென்றுள்ளார்கள்.

Advertisement

Advertisement