• Aug 22 2025

சினிமால புன்னகை அரசி… இப்போ சில்க் குயின்.! – சினேகாவின் புதிய பயணம்

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சினேகா. இவருடைய சிரிப்புக்கென்றே தனி ரசிகர் கூட்டம் காணப்பட்டது. இதனால் இவரை செல்லமாக புன்னகை அரசி என்றும் கூட அழைத்தனர். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றார்கள். 


 சமீபத்தில்  தன்னுடைய வீட்டில் அம்மன் பூஜை ஒன்றை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார் சினேகா. அவருடைய வீட்டு பூஜையில் ஏராளமான திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.  இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தள பக்கத்தில்  வைரலானது. 


தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள், நடிகைகள் காதலித்து  திருமணம் செய்து கொண்டாலும்  விவாகரத்து பெற்று இலகுவில் பிரிந்து வருகின்றார்கள். ஆனால் இவர்கள்  பலருக்கு முன்னுதாரணமாகவும்  பலரது ஃபேவரிட் ஜோடியாகவும் வலம் வருகின்றார்கள். 

இந்த நிலையில் நடிகை சினேகா புதிதாக  ஆடை கடை ஒன்றை  திறந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு   இந்த புதிய பிசினஸுக்கு பலரும் தமது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


அதன்படி சினேகா தனது சினேகாலயா சில்க்ஸ்ஸின் கோயம்பத்தூர் பிராஞ்சை திறந்து வைத்துள்ளார்.  இதோ குறித்த புகைப்படங்கள்.





Advertisement

Advertisement