• Apr 07 2026

'துரந்தர் 2' படத்திற்கு எதிராக அவசர முறையீடு.. ஏன் தெரியுமா? முழு விபரம் இதோ..

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அலி கான், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா உள்ளிட்டோர் நடித்த துரந்தர் 2 மார்ச் 19 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வெளியான முதல் பாகம் போலவே, இரண்டாவது பாகமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த படம் இந்திய உளவாளி மற்றும் தீவிரவாதிகளின் கதை மற்றும் தேச பக்தி காட்சிகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் முதலில் ரிலீஸ் செய்யப்பட்டு, பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. மேலும் இந்தப் படம் மொத்தம் நான்கு மணி நேரம் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

துரந்தர் 2 படம் பற்றி விமர்சன ரீதியில் பல கருத்துகள் இருந்தாலும், படம் வசூலில் வெற்றிபெற்று வருகிறது. அதன்படி படி, கடந்த நான்கு நாட்களில்  மட்டும் இந்த படம் மொத்தமாக 691 கோடிகளை வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், துரந்தர் 2 படத்திற்கு எதிராக முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரமுறையீடு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ள நிலையில், அரசியல் தொடர்பான ஒரு சார்பு கருத்துக்கள் இடம் பெற்றதாக கூறி இந்த படத்தை வெளியிட தடைவிதிக்குமாறு வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார். 

Advertisement

Advertisement