• Dec 26 2024

இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சுள்ளையுமா திரியனும்- ‘கலைஞர் 100' விழாவில் பங்கேற்ற வடிவேலு - கழுவி ஊற்றும் ரசிகர்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவுக்கு பல நல்ல வசனங்களையும், திரைக்கதைகளையும் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது நூற்றாண்டு விழாவை கடந்த டிசம்பர் 24ம் தேதி நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருந்தது. 

ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக அந்த விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 6ம் தேதி இன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.


இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா எனப் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இப்போது வடிவேலுவும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் விஜயகாந்த் மறைவுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றாரே எனக் கலாய்த்து வருவதோடு, வடிவேலுவைத் திட்டித் தீர்த்தும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement