• Dec 26 2024

பொம்பள case போட்டு அனுப்பிட்டாங்க, பூர்ணிமா அம்மாவுக்காகத் தான் பேசாமல் இருக்கிறேன்- கொந்தளித்த பிரதீப்

stella / 11 months ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஒரே நாளில் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாகவும் உள்ளே வந்தனர். 

இதனால் ஆரம்பம் முதலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியிலிருந்து 16 லட்சம் பணப் பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறியிருந்தார்.


இதனை அடுத்து தற்பொழுது,விசித்ராவும் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகியுள்ளார். விசித்ரா எலிமினேட் ஆகிப்போனதால் ரசிகர்கள் பலரும் தமது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெறியேறியதை  பிரதீப் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆக்டீவாக இருந்து வருகின்றார்.

இறுதிப்போட்டிக்கு செல்வது கடினம் என நினைத்த பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டதால் குஷியான பிரதீப் பேன்ஸ், பிரதீப் ரசிகர்கள் ரெட் கார்டு கொடுத்த அவருக்கு இது தேவை தான் என ட்விட் செய்து வருகிறார்கள். இதை பார்க்க பூர்ணிமா ரசிகர்கள், கேரக்டர் அசாசினேஷன் கேம் விளையாடியவர் பிரதீப் என திட்டி வருகின்றனர். 


இவ்வாறு இணையத்தில் ரசிகர்கள் சண்டை போட்டு வருவதைப் பார்த்த பிரதீப், பூர்ணிமா அம்மா கிட்ட வாக்கு கொடுத்த ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்கேன். கூலிக்கு மாறு அடிக்குற கும்பல் லாம் இஷ்டத்துக்கு பேசி வாய் கெளறாதீங்க. நான் கேரக்டர் அசாசினேஷன் கேம்களை விளையாடுவதில்லை, அது என்னுடைய பழக்கம் இல்லை என பதிலடி கொடுத்திருந்தார். 

இருந்தும் விடாமல் பூர்ணிமா ரசிகர்கள் பிரதீப்பை தொடர்ந்த விமர்சித்து வந்ததால் கடுப்பான பிரதீப், என்ன அடிச்சு சாவடிச்சு டைட்டில எடுத்துக்கனு நான் தான் சொன்னேன். அவங்க பெருந்தன்மையா பொம்பள case போட்டு அனுப்பிட்டாங்க. அப்படி தான் நான் பார்க்குறேன். உண்மையில் நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. இந்த சீசன் முடிஞ்சதும் நான் போய் சம்பளம் வாங்கிட்டு வருறேன். அநியாயத்துக்கு டாக்சிக்கா இருக்கு என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.


Advertisement

Advertisement