• Jan 07 2025

"சரக்கடிப்பமா சார் சரக்கு " மேடையில் பாலாவை பார்த்து கேட்ட வரலட்சுமி..!

Mathumitha / 2 days ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாலாவின் சினிமா வாழ்க்கையினை பாராட்டும் விதமாக தற்போது பாலாவின் 25 வருட சினிமா பயணம் எனும் நிகழ்ச்சியில் அவரது திரைப்பட நடிகர்,நடிகைகள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.இதன் போது இவரது பட நடிகைகள் அனைவரையும் மேடையில் அழைத்து உரையாடுவதற்கு ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்தது.


இதில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது பட அனுபவத்தினை பகிர்ந்தார் "சரக்கடிப்பமா சார் சரக்கு" என பாலா இயக்கத்தில் இவர் நடித்த தாரை தப்பட்டை படத்தின் டயலொக் ஒன்றினை கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் "நான் போடா போடி மூலம் சினிமாவில் அறிமுக மாகி இருந்தாலும் எனக்கென ஒரு அடையாளத்தை கொடுத்தது பாலா தான் இவர் எனக்கு இன்னொரு அப்பா மாதிரி நான் 2 போன் கோலுக்கு மட்டும் தான் எழும்பி ஸ்டடியா நிப்பன் ஒன்னு என்னோட அப்பா மற்றது பாலா சார் தான் "என கூறி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement