• Apr 19 2026

விஜயகாந்தின் உடலிற்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பை வீசிய வீடியோ- கடும் கோபத்தில் தளபதி ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் மூத்த நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த், உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நேற்று காலை உயிரிழந்தார்.இவருடைய உடலுக்கு மக்களும், திரையுலக நட்சத்திரங்களும், அரசியல் பிரமுகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவர் செய்த பல நல்ல விஷயங்கள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் நேற்றைய தினம்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதுவரை பொது இடத்தில் நாம் யாரும் நடிகர் விஜய்யை இப்படி பார்த்ததே இல்லை. அப்படி மனம் உடைந்துபோய் கண்ணீர் விட்டு அழுதார்.


குறிப்பாக இறுதி 10 வினாடிகள் விஜயகாந்தை விஜய் பார்த்துவிட்டு வரும் தரும் மனதை உலுக்கியது. அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்ட விஜய் கூட்ட நெரிசலில் கஷ்டப்பட்டார்.இதில் எங்கிருந்தோ செருப்பு ஒன்று வந்து விஜய்யை தாக்குவது போல் வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement