• Dec 26 2024

‘லியோ 2’ பாசிபிள் தான் .. எந்த தைரியத்தில் சொன்னார் லோகேஷ்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ’லியோ’ படத்தின் இரண்டாம் பாகம் சாத்தியம் தான் என்றும், விஜய் எப்போது தயார் என்று கூறினாலும் அந்த படத்தை இயக்க நான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். லோகேஷ் கனகராஜின் இந்த பேட்டியை அடுத்து அவரை விஜய் ரசிகர்கள் வறுத்து எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த ’லியோ’  திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் விஜய், தான் நடிக்கும் 69 ஆவது படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போவதாகவும் அதன் பின் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

’தளபதி 69 ’படத்தை முடித்த பிறகு அவர் தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை மக்கள் முன் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுவார் என்பதால் அவர் முழுமையாக திரை உலகில் இருந்து விலகி விடுவார் என்றே கூறப்படுகிறது.



இந்த நிலையில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ’லியோ-2’ படம் இயக்க தயார் என்றும் விஜய் எப்போது வந்தாலும் அவரை இயக்குவேன் என்றும் கூறியிருந்தார். ’தளபதி 69’ படத்தை நடித்து முடித்துவிட்டு அதன் பின் தமிழக முதல்வராக விஜய் கனவு கொண்டிருக்கும் நிலையில் அவரை எப்படி இயக்குவேன் என்று லோகேஷ் கனகராஜ் கூறலாம் என்றும் அப்படியானால் விஜய் தேர்தலில் தோல்வி அடைந்து மீண்டும் சினிமா வருவார் என்று லோகேஷ் கனகராஜ் நினைக்கிறாரா என்றும் விஜய் ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த பதிவுகள் சமூக வலைதளத்தில் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement