• Dec 26 2024

தவெக மாநாட்டில் One Man Show காட்டிய விஜய்.? பாஜக சார்பில் தரமான பதிலடி கொடுத்த ராதிகா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக முதல்வர் வேட்பாளராக இளைய தளபதி விஜய் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக இப்போது இருந்தே தயாராகி வருகின்றார் விஜய்.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நிறுவிய விஜய் அதன் பின்பு கட்சி அறிக்கை, கட்சிக்கொடி என ஒவ்வொன்றையும் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். ஆனாலும் இந்த கட்சியின் கொள்கைகள் என்ன? செயல் திட்டம் என்ன? என்பதை பற்றி வெளி விடாமல் இருந்தார். இது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்தது.

இதற்கிடையில் வெங்கட் பிரபு இயக்கிய கோட் படத்தில் நடித்து முடித்தார். அதன் வெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு தனது 69 ஆவது படமான எச். வினோத் இயக்கும் படத்திலும் நடிப்பதற்கான பூஜைகளை ஆரம்பித்து படப்பிடிப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

d_i_a

இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது மாநில மாநாடு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் தனது செயல் திட்டங்களை பற்றி சொன்னதோடு சினிமாவில் உள்ள தனது பெயர், புகழ், ஊதியத்தை விட்டு உங்களுக்காக வருகின்றேன் என்று உணர்ச்சி பூர்வமாக பேசியிருந்தார்.


இந்த நிலையில்,  தமிழக வெற்றி கழகத்தில் விஜய் பல கட்சிகளை தாக்கி பேசியுள்ளார். இது தொடர்பில் ராதிகா கூறுகையில், விஜய் தனது படங்களைப் போலவே தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை வன் மேன் ஷோவாக காட்டியுள்ளார். அடுத்து தனது கட்சிக்காரர்களை அடையாளம் காட்டி என்ன செய்யப் போகின்றார் என்பதை பார்ப்போம். பாஜகவை தாக்கி பேசிய விஜய் கொஞ்சம் யோசிப்பார் என்று நினைக்கின்றேன் என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement