• Jan 07 2025

அடுத்த சீரியலுக்கும் சுபம் போட்ட விஜய் டிவி.. ! கிளைமேக்ஸ் காட்சியின் ஷூட் வைரல்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் மோதலும் காதலும். இந்த சீரியலுக்கு முதலில் விக்ரம் வேதா என்று தான் பெயர் வைக்கப்பட்டது ஆனால் அதன் காப்பி ரைட்ஸ் காரணமாக பெயர் மாற்றப்பட்டது.

மோதலும் காதலும் சீரியலில் சமீர் மற்றும் அஷ்வதி இருவரும் ஜோடியாக நடித்து வந்தார்கள். இந்த சீரியல் ஏற்கனவே ஒளிபரப்பான ஹிட் தொடர் ஒன்றின் சாயலாக உள்ளது என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வந்தார்கள்.


எனினும் தற்போது மோதலும் காதலும் சீரியல் திடீரென முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மோதலும் காதலும் சீரியலும் கடைசி நாள் படப்பிடிப்பு போட்டோவை சமூக வளத்தலங்களில் வெளியிட்டு உள்ளார்கள் படக்குழுவினர்.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நாள் ஓட்டி இருக்கலாம் என இந்த சீரியலுக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement