• Apr 07 2026

ஹீரோவா என ஏளனம் செய்தவர்களைத் தட்டிக் கேட்ட விஜயகாந்த்... லிவிங்ஸ்டனின் பேட்டி வைரல்

shali / 1 day ago

Advertisement

Listen News!

நடிகர் லிவிங்ஸ்டன் சமீபத்தில் பகிர்ந்த ஒரு நினைவுச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, ஒரு காலத்தில் தாம் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த போது, ஒரு படப்பிடிப்புக்காக ரயிலில் பயணம் செய்தனர். 


அந்தப் பயணத்தில் விஜயகாந்த், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் இருந்ததாக அவர் தெரிவித்தார். அப்போது தன்னிடம் ஒரு கதை இருப்பதாகவும், அதில் தானே ஹீரோவாக நடிக்க விரும்புவதாகவும் லிவிங்ஸ்டன் கூறியுள்ளார்.

அவரது இந்த வார்த்தைகளை கேட்ட சிலர் சிரித்தபோது, விஜயகாந்த் மட்டும் அதற்கு எதிராக நின்று, “அவர் ஹீரோவாக நடிக்க நினைத்தால் அதில் தவறு என்ன?” என்று மற்றவர்களை கண்டித்தாராம். மேலும், லிவிங்ஸ்டனுக்கு தைரியம் அளித்து, “நீ நடி, பார்த்துக்கலாம்...” என்று ஊக்கப்படுத்தியுள்ளார். இந்த ஆதரவு லிவிங்ஸ்டனுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது.

அந்த ஊக்கத்தின் விளைவாக, லிவிங்ஸ்டன் தானே கதை எழுதி, ஹீரோவாக நடித்த படம் தான் சுந்தர புருஷன். இந்த படம் வெளியான போது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஜயகாந்தின் அந்த ஒரு வார்த்தை தான் தனது வாழ்க்கையை மாற்றியது என்று லிவிங்ஸ்டன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement