• Jun 11 2026

பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்.. இப்போது எங்கே? என்ன செய்கிறார் தெரியுமா?

shali / 2 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் கானா வினோத். தனது எளிமையான பேச்சு, நேர்மையான அணுகுமுறை மற்றும் தனித்துவமான குணத்தால் அந்த சீசனில் ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்தார். பலரும் அவரே டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், இறுதிக்கட்டத்தில் அவர் பணப்பெட்டியுடன் வெளியேறிய முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அந்த முடிவு குறித்து அப்போது பல்வேறு கருத்துக்கள் எழுந்தாலும், கானா வினோத் தனது வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக, நிகழ்ச்சிக்கு பிறகு அவர் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கானா வினோத் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை பதிவு செய்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், குடும்பத்தினருடன் சிரித்துப் பேசும் தருணங்கள் மற்றும் மகிழ்ச்சியான நிமிடங்கள் தெளிவாக பிரதிபலிக்கிறது. இந்த வீடியோ வெளியாகியவுடன், ரசிகர்கள் பலரும் அதை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். 

Advertisement

Advertisement