• Apr 07 2026

ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' படத்தை பார்த்து வியந்து பாராட்டிய விராட் கோலி!

shali / 4 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் இதுவரை பார்த்த அனுபவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ள திரைப்படம் தான் “துரந்தர்”. இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.


இந்தப் படத்தைப் பார்த்த பின், விராட் கோலி தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார். “கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் ஒரு நொடியும் கண் சிமிட்டாமல் பார்த்தேன். இது போன்ற சினிமா அனுபவத்தை நான் இதுவரை கண்டதே இல்லை.” என்று அவர் கூறியுள்ளார். மேலும், இயக்குநர் ஆதித்யா தரின் திறமையும் அர்ப்பணிப்பும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது எனவும் அவர் பாராட்டியுள்ளார்.

படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தாலும், குறிப்பாக ரன்வீர் சிங்கின் நடிப்பு குறித்து விராட் கோலி மிகவும் உயர்ந்த பாராட்டுகளை தெரிவித்தார். “இந்தப் படத்தின் மூலம் நீங்கள் ஒரு புதிய உயரத்தை எட்டியுள்ளீர்கள். உங்கள் நடிப்பு அற்புதம். ABSOLUTELY WOW” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ள “துரந்தர்”, தற்போது இந்திய சினிமாவில் பேசப்படும் முக்கிய படங்களில் ஒன்றாக திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement