தெலுங்கு திரையுலகில் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல ஜோடிகளில் ஒருவராக பார்க்கப்படும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குறித்து சமீபத்தில் ஒரு மனதை வருடும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு ‘லக்கி’ என்ற சிறுமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு ரீல்ஸ் வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்தது. அந்த வீடியோவில், விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று அவள் மழலை மொழியில் வருத்தத்துடன் கூறியிருந்தார்.
“நாமும் ரசிகர்கள் தானே, எங்களை அழைத்திருக்கலாம்” என்ற அவளது பாசமிகு வார்த்தைகள் ரசிகர்களின் இதயத்தை தொட்டது. அந்த வீடியோ விரைவில் வைரலாகி, பலரும் அந்த சிறுமியின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த வீடியோவை கவனத்தில் எடுத்த விஜய் தேவரகொண்டா, அந்த சிறுமியை சந்தித்து மகிழ்ச்சி அளிக்க முடிவு செய்தார். பின்னர், லக்கி மற்றும் அவரது குடும்பத்தை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு மனம் கவர்ந்த வரவேற்பை அளித்துள்ளார். அங்கு, சிறுமிக்கு பிடித்த உணவுகள் மற்றும் இனிப்புகளை தயார் செய்து பரிமாறியுள்ளனர். இந்த சந்திப்பு மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணமாக மாறியது.
இந்த நிகழ்வில் ராஷ்மிகாவும் கலந்து கொண்டு, சிறுமியுடன் அன்பாக பேசி, அவளுடன் நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் உணர்வுகளை மதித்து, அவர்களை நேரில் சந்தித்து மகிழ்ச்சி அளிக்கும் இந்த செயல் பலராலும் பாராட்டப்படுகிறது.
Listen News!