• Dec 26 2024

விஜய் எப்படியும் நடிப்புக்கு திரும்பி வந்துடுவார்.. அப்ப நான் தான் அவரை காப்பாத்தணும்.. விஷாலின் கணக்கு..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

அரசியலுக்கு செல்லும் விஜய் எப்படியும் நடிப்புக்கு இரண்டு வருடம் கழித்து திரும்பி வந்து விடுவார் என்றும் அப்போது நான் தான் அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் விஷால் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் ’தளபதி 69’ படத்திற்கு பின்னர் நடிக்க மாட்டேன் என்றும் முழு அளவில் அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார். ஆனால் சில அரசியல் விமர்சகர்கள் விஜய்யால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றும் கண்டிப்பாக அவர் 2026 ஆம் ஆண்டில் எதிர்பார்த்த வெற்றியை பெற மாட்டார் என்றும் அதன் பின் மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க வந்து விடுவார் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ’துப்பறிவாளன் 2’ படத்தை இயக்க இருக்கும் விஷால் இந்த படத்தை சூப்பர் ஹிட் படம் ஆகிவிட்டால் அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற கனவில் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் எப்படியும் அரசியலில் தோல்வியடைந்து இரண்டு வருடம் கழித்து நடிப்புக்கு திரும்பி வருவார் என்றும் அப்போது தான் ஒரு நல்ல இயக்குனர் என்பதை நிரூபித்து விட்டால் தனக்கு வாய்ப்பு கொடுப்பார் என்றும் விஜய்யின் படத்தை இயக்க தனக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாக விஷால் கூறியதாக அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்.



விஜய் அரசியலில் தோல்வி அடைந்து சினிமாவுக்கு திரும்பி வருவாரா? அப்படியே வந்தாலும் அவர் தனது படத்தை விஷாலுக்கு வாய்ப்பு கொடுப்பாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement