• Jun 10 2026

நாம ஜெட் வேகத்தில் போறோம்… ஜோகிபாபுவை நெகிழவைத்த கிரிக்கெட் வீரர்..! யார் தெரியுமா?

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, சமீபத்தில் ஒரு நேர்காணலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், உலகக் கோப்பை வென்ற வீரருமான மகேந்திர சிங் தோனி குறித்துப்  பகிர்ந்த அனுபவம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


கோடிக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்த தோனி, யோகிபாபுவின் மனதிலும் ஒரு தனி இடத்தைப்  பிடித்துள்ளார். 'LGM' திரைப்பட விழாவில், தோனியுடன் நேரடியாகப் பேசிய அனுபவம் குறித்தும், அந்த சந்திப்பின் போது நடந்த உரையாடல் பற்றியும் யோகிபாபு சிறப்பாகப் பகிர்ந்துள்ளார்.

LGM திரைப்பட விழாவில் கலந்து கொண்ட யோகிபாபு, அந்த நிகழ்ச்சியின் முக்கிய தருணங்களை நினைவுகூர்ந்தார். அதன்போது அவர், "நான் ஒரு மூலையில் நின்றேன். அப்போது தோனியின் மனைவி சாக்ஷி எனதருகில் வந்து தோனியின் அருகில் அமருங்கள் என்று சொன்னார். நான் எதற்கு என்று கேட்டதற்கு, தோனி தான் உங்கள அருகில் அமரச் சொன்னார்." என தோனியின் மனைவி கூறியிருந்தார். இதனைக் கேட்ட உடனே நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்து கொண்டதாகவும் ஜோகிபாபு தெரிவித்திருந்தார்.


அதனைத் தொடர்ந்து, "நான் அவர் பக்கத்தில் அமர்ந்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல், சாரி சார்… எனக்கு ஆங்கிலம் தெரியாதுன்னு சொன்னேன். அதற்கு தோனி எனக்கும் ஒழுங்கா ஆங்கிலம் வராது. அதனால கவலைப்படாதீங்க. நாம இருவரும் ஜெட் வேகத்தில் போயிட்டு இருக்கோம். அதுதான் முக்கியம்!”  எனவும் தெரிவித்திருந்தார். இதன் மூலம் ஒரு மனிதரின் மனிதநேயத்தினை அறிந்து கொள்ளமுடிகிறது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement