அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜயின் இறுதிப் படமான ஜனநாயகனும், சிவகார்த்திகேயனின் 25 வது படமான பராசக்தியும் ரிலீஸ் ஆக உள்ளன. இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துள்ளது.
சுதா கொங்கார இயக்கிய பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அதே நேரத்தில் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகின்றது.
ஜனநாயகன் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில் இந்த நிகழ்வு மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பெற்று உள்ளது.
பராசக்தி திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழாவும் எதிர்வரும் ஜனவரி 3ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு படக்குழுவினரும் திட்டமிட்டுள்ளனர். அதில் சிறப்பு விருந்தினர்களாக கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் பேசப்படுகின்றது.

இந்த நிலையில் நடிகர் ஜீவா ரவி தெரிவித்த கருத்து தற்போது வைரல் ஆகி வருகிறது. அதன்படி அவர் கூறுகையில், ஜனநாயகன் படத்தோட பராசக்தி வர்றது எங்களுக்கு ஜாலியா தான் இருக்கும். ஏனென்றால் எல்லோருக்கும் தெரியும் ஜனநாயகன் படம் தான் எல்லோரும் பார்ப்பாங்க என்று..
ஆனால் சிவகார்த்திகேயனை நினைச்சா தான் பாவமா இருக்கு . அவர் பெயர் இதுல தேவையில்லாம இழுக்கப்படுது. அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை. நல்ல மரியாதையான ஆளு.. அவருக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. இது இரண்டு தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே நடக்கிற பிரச்சனைதான். இருந்தாலும் இதுல ஒரு அரசியல் இருக்கு என்று தெரிவித்துள்ளார்.
Listen News!