• Dec 25 2024

சர்ச்சையாகிய திருப்பதி லட்டு... தலைவர் ரஜினியின் பதில் என்ன?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினியின் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில், இன்று காலை அவர் விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை திரும்பியபோது நிருபர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர்.


வேட்டையன் படம் குறித்துப் பேசும்போது, "வேட்டையன் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அவை அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறேன். வேட்டையனுக்குக் கிடைக்கும் வரவேற்பு சந்தோஷமாக இருக்கிறது என்று கூறினார்.. 


மேலும் சமீபத்தில் தர்பாருக்குப் பிறகு முழு நேர போலீஸாக நடித்தது வித்தியாசமான அனுபவம்." என்று கூறினார். பின்னர், "நீங்க மிகப்பெரிய ஆன்மிகவாதி, திருப்பதி லட்டு விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?" என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ரஜினி, "சாரி...சாரி... நோ கமெண்ட்ஸ்" என்று கூறி, அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. இதனால் பிரச்சினைகளில் தலையிடாமல் தலைவர் தப்பித்துவிட்டார். 




Advertisement

Advertisement