• Apr 23 2026

எனக்காக திருப்பதிக்கு நடந்தே போனான்.. தேங்கா சீனிவாசன் பற்றி வெண்ணிற ஆடை மூர்த்தி ஓபன்டாக்

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் தனித்துவமான இடத்தை பிடித்திருந்த மறைந்த நடிகர் தேங்கா சீனிவாசன் குறித்து, அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான வெண்ணிற ஆடை மூர்த்தி பகிர்ந்துள்ள மனம் நெகிழச் செய்யும் நினைவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


சமீபத்திய ஒரு பேட்டியில் வெண்ணிற ஆடை மூர்த்தி, தேங்கா சீனிவாசனுடன் இருந்த தனது ஆழமான நட்பைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார்.

அதாவது, " தேங்கா சீனிவாசனை எனக்கு ரொம்ப புடிக்கும். அவன் எனக்கு நண்பனுக்கும் மேல. நாங்க ரெண்டு பேரும் சினிமாவுக்கு வாறதுக்கு முன்னாடி இருந்தே பழக்கம். எனக்கு இருதய பிரச்சனை வந்ததும் அவன் கிட்ட 'நான் இன்னும் எவ்ளோ நாள் இருப்பன்னு தெரியாதுடான்னு சொன்னதும்'... 

டேய், எனக்கு அப்புறம் தாண்டா நீ வருவான்னு சொல்லி திருப்பதிக்கு நடந்தே போய் எனக்காக வேண்டிக்கிட்டு லட்டு எடுத்துவந்து கொடுத்து, "டேய் பெருமாள வேண்டிக்கிட்டேன்டா.. இனி உனக்கு ஒன்னும் ஆகாதுனு சொன்னான். எந்த நண்பன் இப்புடிப் பண்ணுவான்." என்று கூறியுள்ளார். 

இருவரும் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே ஒருவரை ஒருவர் அறிந்திருந்ததாகவும், சினிமா பயணத்திலும் அந்த உறவு மேலும் வலுத்ததாகவும் அவர் தெரிவித்தார். திரையில் நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைத்த இந்த இருவரின் நட்பு, திரைக்குப் பின்னால் இவ்வளவு ஆழமானது என்பதை அறிந்த ரசிகர்கள் உணர்ச்சி வசப்படுகின்றனர்.

Advertisement

Advertisement