• Dec 25 2024

சம்பளத்தை குறைக்க ரஜினி-லோகேஷ் சேர்ந்து செய்த திட்டம்.. ‘கூலி’யில் ஏமாந்துட்டாரா சத்யராஜ்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’கூலி’ திரைப்படத்தில் சத்யராஜ் நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் முதலில் வில்லன் கேரக்டருக்கு தான் நடிக்க ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டதாகவும் ஆனால் அவர் அதிக சம்பளம் கேட்டதால் ரஜினி மற்றும் லோகேஷ் இணைந்து செய்த பிளான் காரணமாக அவருக்கு நண்பன் கேரக்டர் கொடுத்து சம்பளம் அதிரடியாக குறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் இமயமலையில் இருந்து வந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ’கூலி’ திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க தான் சத்யராஜ் முதலில் தேர்வு செய்யப்பட்டதாகவும் ஆனால் சத்யராஜ் கோடியை நெருங்கி சம்பளம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பு தரப்பு, வேறு திட்டம் கூறியதாகவும் தெரிகிறது. அந்த திட்டத்தின்படி லோகேஷ் மட்டும் ரஜினிகாந்த் ஆலோசனை செய்ததில் சத்யராஜின் வில்லன் கேரக்டரை பாசிட்டிவாக மாற்றி விடுவோம், வில்லன் கேரக்டருக்கு வேறொரு பாலிவுட் நடிகரை தேர்வு செய்வோம் என்று முடிவு செய்ததாகவும் இதனை அடுத்து வில்லன் கேரக்டர் இல்லை ரஜினி நண்பர்கள் கேரக்டர் என்று சொன்னவுடன் சத்யராஜ் சம்பளத்தை குறைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சத்யராஜ் ஆரம்பத்தில் ரஜினியின் நண்பன் கேரக்டரில் நடித்தாலும் போக போக அது தானாக வில்லனாக மாறிவிடும் என்றும் சத்யராஜை கூலி படக்குழு ஏமாற்றி விட்டார்கள் என்றும் கூறப்படுவது தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement