தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்பட்ட விஜய், அரசியலில் நுழைந்த பின்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். தமிழக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், இலவசமாக வாங்கக் கூடாது, கொடுக்கக் கூடாது என்று சினிமா வசனங்களை பேசிய விஜய், குழந்தை பிறந்தால் தங்க மோதிரம் கொடுப்பதாக கூறியிருந்தார். ஒரு நாளைக்கு 2000 குழந்தைகள் பிறக்கின்றன. அதற்கு சனி, ஞாயிறு கிடையாது. அப்படி பார்த்தால் வருடத்தில் எத்தனை ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன? அத்தனைக்கும் விஜய் தங்க மோதிரம் கொடுப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், விஜய் வாய்க்கு வந்தது எல்லாம் பேசுகிறார். உச்சகட்டமாக உளறுகிறார். விஜயால் பல உயிர்கள் பலியாகி இருக்கின்றன. ஆனால் அவர் வளைகாப்புக்கு செல்கிறார். அவர் என்னுடைய நண்பனின் மகன்தான். ஆனாலும் அவருக்கு சினிமா தெரியவில்லை என்று தெரிவித்தார்.
தவெக உறுப்பினர்கள் தொடர்பாக பேசிய எஸ்.வி.சேகர், எந்த வீட்டில் அப்பா அம்மா காசுல பொறுப்பில்லாமல் சுத்துறாங்களோ, அவங்க அத்தனை பேரும்தான் தமிழக வெற்றி கழகத்தில் காணப்படுகின்றனர். ஏனைய கட்சியில் இருந்து அடித்து விரட்டியவர்கள்தான் இன்று அந்த கட்சியில் உறுப்பினராக காணப்படுகின்றார்கள் என்று விமர்சித்தார்.
இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி விவாதங்களை கிளப்பி வருகின்றன.
Listen News!