• Dec 25 2024

ரஜினிக்கு எதிரான அரசியல் கருத்து தெரிவித்த ‘வேட்டையன்’ இயக்குனர்.. கோபத்திற்கு ஆளாவாரா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் தற்போது பரபரப்பாக தேர்தல் நிலவரங்கள் நடைபெற்று வர, அது தொடர்பில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி பிரபலங்களும் வாக்கு சேகரிக்க தொடங்கி உள்ளனர்.

இதில், பிரபல நடிகரான சரத்குமார், ராதிகா, ரோஜா, மன்சூர் அலிகான் என ஒரு சிலர் இம்முறை தேர்தலில் போட்டி இட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் வேட்டையன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் தனது எக்ஸ் தள பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.


அதன்படி அவர் தெரிவிக்கையில், வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை.

இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன.

மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement