• Dec 26 2024

மைக்கேல் ஜாக்சனின் கெட்டப்போடு ஹாலிவுட் பக்கம் என்ட்ரி கொடுக்கும் யோகி பாபு

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் தான் யோகி பாபு. இவர் நாளடைவில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். தற்போது பிஸியான நடிகர்களுள் ஒருவராக யோகி பாபு காணப்படுகின்றார். இவர் நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகின்றது.

யோகி பாபு நடிப்பில் இறுதியாக போட் படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்பு கோழிப்பண்ணை செல்லத்துரை படமும் யோகி பாபு நடிப்பில் வெளியானது. இது சர்வதேச திரைப்படத்தில் விருதை வென்ற படமாகவும் காணப்படுகிறது. தற்போது மண்ணாங்கட்டி, வானவன் மற்றும் ஜோரா கைய தட்டுங்கள் போன்ற படங்களிலும் நடித்து வருகின்றார்.

d_i_a

இந்த நிலையில், பிரபல இயக்குனர் டெல். கே. கணேசன் இயக்கத்தில் உருவாக்கும்  ‘டிராப் சிட்டி’ என்ற படத்தில் யோகி பாபு நடிக்க கமிட் ஆகி உள்ளதோடு இந்த படத்தின் மூலம் முதன்முறையாக ஹாலிவுட் பக்கம் அறிமுகமாகின்றார் என்ற தகவலும் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.


இந்த படத்தை திருச்சியை சேர்ந்த பிரபல இயக்குனரான டெல்.கே. கணேசன் இயக்கி உள்ளதோடு,  இந்த படத்தில் பிராண்டன் டி. ஜாக்சன், ஜே ஜென்கின்ஸ், நெப்போலியன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் யோகி பாபு ஆங்கில ராப் பாடல் ஒன்றுக்கு மைக்கேல் ஜாக்சனை போல நடனமாடும் காட்சியும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement