சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வரும் சர்ச்சை வீடியோவால், பிரபல யூடியூபராக விளங்கி வரும் ஸ்ரீவிஷ்ணு கடும் அவமானத்துக்குள்ளாகியுள்ளார். ஒரு பெண்ணிடம் அவர் தவறான முறையில் பேசுவதாக கூறப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, மிகுந்த விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த வீடியோ குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ஸ்ரீவிஷ்ணு வெளியிட்டுள்ள வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.
போனில் ஸ்ரீவிஷ்ணு ஒரு பெண்ணிடம் தவறாக பேசுகிறார் என்ற வீடியோ வெளியாகியதைத் தொடர்ந்து பலரும் ஸ்ரீவிஷ்ணுவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வீடியோவில் அவர் அந்தப் பெண்ணை ‘தங்கச்சி’ என்று அழைத்து தவறாகப் பேசியதாலேயே இதனை மக்கள் பலரும் விவாதிக்கின்றனர்.
தற்பொழுது வெளியான வீடியோவில் ஸ்ரீவிஷ்ணு கூறியதாவது, “அந்த வீடியோ நான் சொந்தமாக வெளியிட்டது இல்ல. என்னுடைய யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஹாக் பண்ணித் தான் வெளியிட்டு உள்ளார்கள். இப்படி செய்தது எனக்கு முன்பே தெரிந்தவர்கள் தான் என்றதுடன் சந்தோஷ், காயத்திரி, ரகுநாத், மரியான் என்று குறிப்பிட்ட சிலர் இந்த வேலைக்கு பின்னால் இருக்காங்க. அவர்கள் தான் இப்பவும் என்னை பிளாக்மெயில் பண்ணிட்டு இருக்காங்க.” என்றும் கூறியுள்ளார்.
தப்பாக நடந்துகொண்டதாக அந்த வீடியோவில் தெரிந்தாலும் அதை முழுமையாக மறுக்கும் ஸ்ரீவிஷ்ணு, “நான் அந்தப் பெண்ணை என் தங்கச்சி மாதிரி தான் நினைச்சேன். அதுதான் நல்ல பாசத்தோட பேசினேன். ஆனால், அந்த வீடியோவில மட்டும் அதை வேற இருக்கு.,” எனக் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஸ்ரீவிஷ்ணு சில நபர்கள் மீது புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. “இந்த ஹாக்கிங், பிளாக்மெயில் சம்பவம் தொடர்பாக என் சார்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். யாரும் மனம் வருந்தாம என் பக்கம் நிற்பது முக்கியம்” எனவும் கூறியுள்ளார்.
Listen News!