• Sep 03 2025

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொலிசாருக்கு பறந்த கடிதம்! ஏன் தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது சினிமா துறையில் மட்டுமில்லாமல் அரசியலிலும் அதிகாரப்பூர்வமாக கால் பதித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் ஆரம்பித்த கட்சி மிகப்பெரிய வரவேற்புக்கு உள்ளானது. இவருடைய பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவருடைய கட்சியில் தொண்டர்கள் ஆகவே மாறினார்கள்.

ஒரு பக்கம் கோட் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தனது கட்சியை விரிவு படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் நடிகர் விஜய் கவனித்து வருகின்றார்.


அந்த வகையில் நேற்றைய தினம் பௌர்ணமி என்பதனால் கட்சி கொடி அறிவிக்கப்பட்டதோடு அதற்கான ஒத்திகையும் பார்க்கப்பட்டது. குறித்த கட்சி மஞ்சள் நிறத்தில் காணப்படுவதோடு அதன் நடுவில் நடிகர் விஜயின் முகம் பதித்த சின்னமும் காணப்படுகின்றது.

இந்த நிலையில், நாளை மறுதினம் நடைபெற உள்ள கட்சி கொடியேற்ற விழாவில் 5000 பேருக்கு  அனுமதி கேட்டு பொலிசாருக்கு தமிழக வெற்றிக் கழகம்  சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement