திரையுலகிற்கு 'முருகா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அசோக், பின்னர் பல தமிழ்த் திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் இவரது நடிப்பு பாராட்டைப் பெற்றாலும், பெரிய வரவேற்பு இல்லாத காரணத்தால் சின்னத்திரைக்கு மாறியவர். தற்போது ஜீ தமிழில் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் 'மௌனம் பேசியதே' தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், ‘வட மஞ்சு விரட்டு’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் அசோக் காயமடைந்தார். படத்தில் இடம்பெறும் காளை ‘பட்டாணி’ எனும் பெயருடையது, எதிர்பாராத வகையில் தனது கொம்புகளால் அவரைத் தாக்கியுள்ளது. இதனால் அசோக்கின் வயிற்றுப் பகுதியில் இருந்து மார்புவரை காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய அசோக், "பட்டாணி என்னுடன் பழக்கமான காளைதான். என்ன நடந்ததோ தெரியவில்லை. ஆனால் என்னை தாக்கிய பிறகு அது சோகத்தில் கண்ணீர் விட்டது. அது ஒரு குழந்தை தவறு செய்த பிறகு மன்னிப்பு கேட்பதைப் போலவே இருந்தது," எனத் தெரிவித்தார்.
தற்போது சிகிச்சைக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள அசோக், விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்
Listen News!