2025 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக கூலி திரைப்படம் காணப்படுகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன், அமீர்கான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கதை விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெறும் கடத்தல், கொலை, பழிவாங்கல் போன்ற சம்பவங்களின் பின்னணியில் அமைந்துள்ளது. இதில் கதையின் நாயகனான ரஜினிகாந்த் தேவா என்ற கேரக்டரில் விடுதி ஒன்றை நடத்தி வருகின்றார்.
மேலும் தனது நண்பர் ராஜசேகர் மர்மமாக இறந்ததாக அறிந்து அதன் பின்பு அதனை கண்டுபிடிப்பதற்காக களம் இறங்குகின்றார். இவருடன் ஸ்ருதி சத்யராஜின் மகளாக கைகோர்க்கின்றார். ஆனால் இறுதியில் இவர் தான் ரஜினியின் மகள் என்ற உண்மையும் வெளி வருகின்றது.
கூலி திரைப்படத்தின் கதை கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதில் ரஜினியின் நடிப்பு மற்றும் மோனிகா பாடல் என்பன ஹை லைட்டாக காணப்பட்டன.
மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களிலேயே முதல் நாளில் 151 கோடிகளை வசூலித்த முதல் படம் என்ற சாதனையையும் கூலி திரைப்படம் படைத்திருந்தது. இதில் அனிருத்தின் பிஜிஎம் படத்தை தூக்கி நிறுத்தியதாகவே விமர்சனங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், கூலி திரைப்படமும் 600 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. இதனால் 600 கோடிக்கு மேல் வசூலித்த மூன்று படங்களைக் கொண்ட ஒரு ஒரே தமிழ் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றும்,
இதற்கு முன்பு 2.0 மற்றும் ஜெய்லர் படங்களின் சாதனையை கூலி திரைப்படமும் சாதித்துள்ளதாக தற்போது தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!