• Sep 08 2025

இம்முறை ஜாய் கிரிசில்டாவை மானபங்கம் செய்தாரா குரேஷி.? வெளியான இன்ஸ்டா வீடியோ

Aathira / 7 hours ago

Advertisement

Listen News!

பிரபல சமையற்கலை வல்லுநரான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவதாக ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டார்.  அதன் பின்பு சமூக வலைத்தளங்களில் டாப்  டாபிக் ஆகவே வலம் வருகின்றார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தான் பெரும் சர்ச்சையாக  மாறியுள்ளது. 

மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.  ஆனாலும்  பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்தார்.   

தற்போது ஜாய் கிரிசில்டாவை கர்ப்பமாக உள்ள நிலையில், அந்த கர்ப்பத்தை மாதம்பட்டி ரங்கராஜ் கலைக்க சொல்வதாக  பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதன் பின்பு மாதம்பட்டி  பற்றி பல அதிர்ச்சி தரும் தகவல்களை பேட்டிகளில் கொடுத்து வருகின்றார். எனினும் மாதம்பட்டி ரங்கராஜ் இதுவரையில் மௌனம் காத்து வருகின்றார். 


இதைத்தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ்  ரொமான்ஸ் பண்ணிய வீடியோ ஒன்றை ஜாய் கிரிசில்டா வெளியிட்டார். இது படு வைரலானது..  இதனை  குக் வித் கோமாளி பிரபலமான குரேஷி  பங்கம் பண்ணி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அதன் பின்பு குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறிய உமைர் கூட மாதம்பட்டி ஸ்டைலில்  வீடியோ ஒற்றை வெளியிட்டார். 

இந்த நிலையில், குக் வித் கோமாளி பிரபலமான குரேஷி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜை  பங்கம் பண்ணுவது போல் வீடியோ வெளியிட்டார்.  

ஆனால் தற்போது 'Toxic girlfriend song' என கேப்சன் போட்டு டாக்சி கேர்ள் பிரண்டை  தாக்குவது போல பாட்டு ஒன்றை பாடி  இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இது ரசிகர்களிடையே வைரலானதோடு மட்டுமில்லாமல் இந்த முறை  ஜாய் கிரிசில்டாவை பங்கம் பண்ணுகின்றாரா குரேஷி? என தமது  கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள். 


Advertisement

Advertisement