• Aug 18 2025

kollywood best actresses இப்போ இவங்களா.? ஏர்போர்ட்டில் என்ன பண்றாங்க பாருங்க.. வீடியோ

Aathira / 7 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளாக தமன்னா மற்றும் ஜான்வி கபூர் வலம் வருகின்றார்கள்.  இவர்கள் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தனக்கென தனி இடத்தில் கெத்தாக காணப்படுபவர் நடிகை தமன்னா.  இவர் கேடி திரைப்படத்தில் அறிமுகமானார்.  அதன் பின்பு விஜய், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.  தமிழ் சினிமாவில் நடிகை தமன்னாவுக்கு இன்றளவில் மட்டும் மிகப்பெரிய மார்க்கெட் காணப்படுகிறது.


அதே போல நடிகை ஜான்வி கபூரும் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த வருகின்றார்.  ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாக காணப்படுவார். இவருடைய நடிப்பில் இறுதியாக தேவராக படம் வெளியானது.  


இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூரும் தமன்னாவும் ஏர்போர்ட்டில் இணைந்து வந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.  அதாவது அவர்கள் இருவரும்  ஒன்றாக ஏர்போர்ட்டில்  பயணித்துள்ளனர். இதன்போது ரசிகர்கள் அவர்களை தனித்தனியாக வைத்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து ஜான்பி கபூர் தமன்னாவின் கைகளை பிடித்து அழைத்துச் சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி உள்ளன. மேலும் இவர்களுடைய  கியூட் ரியாக்ஷனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement