தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா, சமூக நோக்குடன் கூடிய கதைகளை தேர்வு செய்யும் திறமையும், ஆளுமையும் கொண்டவர். சமீபத்தில் அவர் நடித்த 'கருப்பு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது அவர் புதிய பன்மொழி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் புதிய படத்தை, பல ஹிட் படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார் என்பது தான் இந்த படத்தின் முக்கிய சிறப்பு. மேலும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
சூர்யா ஏற்கனவே 'கங்குவா' படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோலை வில்லனாக நடிக்க வைத்திருந்தார். ஆனால் அந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த அனுபவத்தின் பின்னணியில் தான் படக்குழுவினர், அனில் கபூரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம், தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Listen News!