• Aug 18 2025

மாடல் அழகி கார் விபத்தில் மரணம்!யார் இவர்? எந்த நாட்டை சேர்ந்தவர்?விபத்து காரணம் என்ன?

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

2017ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாடல் மற்றும் அழகிப்போட்டி பங்கேற்பாளர் க்ஷேனியா அலெக்ஸாண்ட்ரோவா  கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். ரஷ்யாவின் Tver Oblast பகுதியில் ஜூலை 5ஆம் தேதி இடம்பெற்ற இந்த விபத்தில், க்ஷேனியா தனது கணவருடன் போர்ஷே காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு பெரிய elk மான் கார் கண்ணாடியை உடைத்து காரின் உள்ளே பாய்ந்தது. இந்த நிகழ்வில் க்ஷேனியாவுக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது.


விபத்தின் பின் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். க்ஷேனியா 2017ஆம் ஆண்டு மிஸ் ரஷ்யா போட்டியில் முதல் runner-up ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதே ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் உலக அழகிப் போட்டியில் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்.

இந்த துயரமான சம்பவம் மாடலிங் மற்றும் அழகிப் போட்டி உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு, ரசிகர்கள் மற்றும் சக நடிகைகள், மாடல்களின் மனதை கவலையடைய வைத்துள்ளது.

Advertisement

Advertisement