• Aug 18 2025

என்ன நீங்க இன்சல்ட் பண்றீங்களா? மீனாவால் டென்ஷனான கிரிமினல்ஸ்

Aathira / 9 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  முத்துவும் மீனாவும் ரோகிணியின் அம்மா இருந்த வீட்டிற்கு செல்கின்றார்கள். அங்கு இருந்த ஹவுஸ் ஓனர் அவர்கள் அட்வான்ஸையும் வாங்கிவிட்டு சென்றதாக கூறுகின்றார். மேலும் இப்போதுதான் ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றதாக சொல்லுகின்றார்.

இதனால் முத்துவும் மீனாவும் அவர்களை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று போகும் வழியில் திடீரென பஞ்சாயத்து ஒன்று ஏற்படுகின்றது.  அந்த நேரத்தில் ரோகிணியும் க்ரிஷும் ஹோட்டலில் இருந்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்து விடுகின்றார்கள்.  அதன் பின்பு அங்கு முத்துவும் மீனாவும் போய் பார்க்கும் போது அவர்கள் அங்கு இல்லை.

இன்னொரு பக்கம் ஸ்ருதி,  அண்ணாமலையிடமும் விஜயாவிடமும் தான் புது ஹோட்டல் ஆரம்பிக்க  இருப்பதாகவும் அதற்கு ஆசீர்வாதம் பண்ணுமாறும் கூறுகின்றார்.  பிறகு அங்கு வந்த மனோஜிடம் தனது ஹோட்டலுக்கு ஃப்ரிட்ஜ், டிவி எல்லாம் வேண்டும். ஆனால் எனக்கு எந்தவித பிராஃபிடும் இல்லாமல் அந்த சாமான்களை கொடுக்குமாறும், அதற்கு பதிலாக நீங்க எப்போ வந்தாலும் எனது ஹோட்டலில் ஃப்ரீயாக சாப்பிடலாம் என்றும் கூறுகின்றார்.


ஆனால் மீனாவிடம் ஹோட்டலுக்கு டெகரேஷன் பண்ணனும்.. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சொல்ல,  இதைக் கேட்ட மனோஜ் எங்களிடம் பிராஃபிட் பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மீனாவிடம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று ஸ்ருதி சொன்னதாக சொல்ல,  எங்களுக்கு தான் மீனாவை போல நடிக்க வராது என்று ரோகிணி சொல்கின்றார்.

இதை தொடர்ந்து சீதா மீனாவுக்கு போன் பண்ணி கும்பகோணம் போவதற்கு அவரையும் அழைக்கின்றார்.  ஆனால் தான் வரவில்லை என்று மீனா சொல்லுகின்றார்.  மேலும் மீனாவின் அம்மாவுக்கு முத்து பணம் கொடுத்து விடுகின்றார்.

இறுதியில் மீனா  அருண் வீட்டுக்கு சென்று உங்க மருமகன் உங்களுக்கு பணம் தந்ததாக சொல்ல,  இதனை அருண் கேட்டுவிட்டு என்ன நீங்க இன்சல்ட் பண்றீங்களா?  எனது அத்தையை நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா?  என்று சொல்லி கோபம் அடைகிறார்.  இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement