சினிமாவில் மட்டுமன்றி நிய வாழ்க்கையிலும் சந்தானம் மற்றும் ஆர்யா நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் இணைந்து தற்போது dd next level எனும் படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். ஆர்யா படத்தினை தயாரித்துள்ளார். படம் மே மாதம் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும் படத்தில் கஸ்தூரி, கெளதம் வாசுதேவன் ,நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் புரொமோஷன் வேலைகள் பரபரப்பாக இடம்பெற்று வரும் நிலையில் ஆர்யா குறித்து சந்தானம் பேசிய விடயம் ஒன்று வைரலாகியுள்ளது.
அதாவது ஆர்யா சந்தானம் பாத்து வைத்த வீடு ஒன்றை தனது நண்பர்களை வைத்து இடித்து தரை மட்டம் ஆக்கியுள்ளார். அவரது மனைவியும் அம்மாவும் வெள்ளிக்கிழமை விளக்கு கொழுத்த போகும்போது வீட்டை தேடியுள்ளனர். பின்பு சந்தானம் உண்மையை கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடு பார்ப்பதற்கு நல்லா இல்லை இடித்து புது வீடு கட்டலாம் என கூறி இடித்துள்ளார். அவ்வளவுக்கு எங்கள் நட்பு புனிதமானது என கூறியுள்ளார்.
Listen News!