தமிழ் சினிமாவின் துணை நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமாகிய கூல் சுரேஷ் இவர் சமூக நலன் குறித்து அதிக அக்கறை காட்டி வரும் ஒருவர் இவர் தற்போது பல அரசியல் விடயங்கள் குறித்தும் பேசி வருகின்றார். மேலும் பிக்போஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வந்த இவர் சீசன் 7 இல் போட்டியாளராக கலந்து சிறப்பித்து இருந்தார்.
இவர் தற்போது பேட்டி ஒன்றில் இந்த நிகழ்ச்சி குறித்து மிகவும் கடுமையாக கதைத்துள்ளார். இவர் கொடுத்த இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த பேட்டியில் " பிக்பாஸ் போயிட்டு வந்தால் நல்லதெல்லாம் நடக்காது. அது ஒரு தரித்திரம் பிடித்த நிகழ்ச்சி. பிக்பாஸ் போயிட்டு வந்தவங்க நல்ல பெயர் வாங்கினவங்களும் சரி, கெட்ட பெயர் வாங்கினவங்களும் சரி யாராவது வெளியே தெரிந்திருக்கிறார்களா? இல்ல.... அவங்க வெளியே தெரிவதற்கு ஒரே காரணம் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் மட்டும் தான். காசி, ராமேஸ்வரம் போயிட்டு பாவத்தை எல்லாம் கழிச்சிட்டு வர மாதிரி தான் பிக் பாஸ். பிக் பாஸ்க்கு நான் போனது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மாதிரி தான். பிக் பாஸ் போய்ட்டு வந்தால் பெரிய அங்கீகாரம் எல்லாம் கிடைக்காது. அது ஒரு ராசி இல்லாம இருக்கு. ஆனா, அங்க போறவங்களுக்கு சம்பளம் உண்டு. சாப்பாடு உண்டு. நல்ல சொகுசா இருக்கலாம் " என கண்டனமாக பேசியுள்ளார்.
Listen News!