• Jul 18 2025

நடிகை ஆல்யாவை ஏமாற்றிய உதவியாளர்.! ரூ.76 லட்சம் மோசடியால் அதிர்ச்சியில் உறைந்த பாலிவுட்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பாலிவுட் இளவரசி என அழைக்கப்படும் ஆலியா பட், தற்போது மாபெரும் மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டவர் என தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி இந்திய திரையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அவரின் நெருக்கமான உதவியாளராக இருந்த வேதிகா ப்ரகாஷ் ஷெட்டி என்பவர், ரூ.76.90 லட்சம் மோசடி செய்ததாக பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் மே 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை தொடர்ந்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களுடன் மும்பை பொலீஸார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆலியா பட் நிறுவனம் மற்றும் அவரின் தனிப்பட்ட நிதி விவரங்களை நிர்வகித்த உதவியாளர் வேதிகா ஷெட்டி, பண பரிவர்த்தனைகள், செலவுத் தொகைகள், ஊதிய திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களில் பொய்யான கணக்குகளை சமர்ப்பித்து வந்ததாக தெரியவந்துள்ளது.


பல மாதங்களுக்கு பின்னர், ஆலியாவின் கணக்கு பரிசோதனை நடத்தும் போது, பணமோசடி சம்பந்தமான சந்தேகங்கள் எழுந்தன. பின்னர், அவர் மும்பை சைபர் கிரைம் பிரிவில் புகாரளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement