• Sep 02 2025

"முத்தமழை" பாடலால் ரசிகர்களைக் கவர்ந்த சின்மயி! யூடியூபில் எத்தன கோடி views தெரியுமா?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இசையும், பாடல்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாக இருந்து வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வெளியான 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகுந்த விமர்சனங்களுடனும் ரசிகர்களின் ஆர்வத்துடனும் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் சின்மயி தனது மென்மையான குரலில் 'முத்தமழை' என்ற காதல் பாடலை பாடினார். இந்த நிகழ்ச்சியின் வீடியோ YouTube-ல் வெளியான சில நாட்களுக்குள் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்துவிட்டது.

தற்போது இந்த வீடியோ 5 கோடி பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது என தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது தமிழ் திரைப்பட இசை வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை எனலாம். 'தக் லைஃப்' இசை வெளியீட்டில் சின்மயி நேரில் பாடியபோது, நிகழ்ச்சி வலிமை நிறைந்ததாக காணப்பட்டது. 


பல ஆண்டுகளாக பாடாமல் இருந்த சின்மயி, மீண்டும் ஒரு பெரிய மேடையில் குரல் கொடுத்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

Advertisement

Advertisement