சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், தற்போது Zion Films மற்றும் MRP Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இந்தப் புதிய திரைப்படத்தை மதன் இயக்குகிறார். இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றுகிறார். இதில் அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாகப் பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். தன்னுடைய இளமையான தோற்றமும் திறமையான நடிப்பாலும் தமிழ் ரசிகர்களிடையே தனித்த இடம் பிடித்த அனஸ்வரா, இதன் மூலம் மேலும் ஒரு முக்கியப்படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், அனஸ்வரா ராஜனின் பிறந்த நாளையொட்டி படக்குழு சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடியது. இந்த நிகழ்வில் திரைப்படக் குழுவினர் முழுமையாக கலந்துக்கொண்டு அனஸ்வராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். அந்த மகிழ்ச்சியான தருணங்களை படக்குழு புகைப்படங்களாக பதிவுசெய்து, ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.
படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த புதிய கூட்டணியின் வெளிவரும் படம் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Listen News!