• Apr 27 2025

ஓடாத படத்திற்கு சக்சஸ் மீட்டா.? நல்லா வாழுறாரு பாலாஜி.! இளசுகளை கடுப்பாக்கிய வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்ட நடிகர் பாலாஜி முருகதாஸ். இவருடைய நடிப்பில் தற்போது வெளியான திரைப்படம் தான் ஃபயர். இந்த படத்தில் ரட்சிதா, சாட்சி அகர்வால், காயத்ரி, சாந்தினி உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

ஃபயர் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் டாக்டர் ஒருவர் பல பெண்களை ஏமாற்றிய விவகாரம் தொடர்பான கதைக்களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தற்போது இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

d_i_a

மேலும் இந்த படம் உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட போதும் இது பழிவாங்கும் கதையாகவே உள்ளதே தவிர இந்த படத்தில் சமூகத்துக்கு தேவையான மெசேஜ்கள் எதுவும் சொல்லப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.


அத்துடன் இந்த படத்தில் ஆபாச காட்சிகள் தூக்கலாகவே இருப்பதாகவும் பெண்களை பலவீனமாக காட்டுவதாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது. மேலும் வசூல் ரீதியாகவும் ஃபயர் திரைப்படம் பெரிதளவில் லாபத்தை ஈட்ட வில்லை.

இந்த நிலையில், ஃபயர் திரைப்படத்தின் சக்சஸ் பார்டியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பாலாஜி. அதில் அவருடன் சாட்சி அகர்வால் மற்றும் சாந்தினி ஆகியோர் காணப்படுவதோடு அவர்கள் இருவரையும் தூக்கி வைத்து பாலாஜி போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஓடாத படத்திற்கு எதற்கு சக்சஸ் மீட்? பாலாஜி நல்லா வாழறாரு என தமது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்..

Advertisement

Advertisement