• Jul 18 2025

'அஸ்வத்தாமா..' எப்படி உருவானார் தெரியுமா? மேக்கப் ஆர்டிஸ்ட் சொன்ன சுவாரசிய தகவல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் தான் கல்கி 28 98 ஏடி. இந்த திரைப்படத்தில் பிரபாஸுடன் கமலஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் மிருணாள் தாகூர், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா ஆகியோர் சிறப்பு கேரக்டர்களிலும் நடித்திருந்தார்கள்.

இந்தத் திரைப்படம் கடந்த 27ஆம் தேதி உலக அளவில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். இதனை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது.

கல்கி படத்தில் அமுதாபச்சன் அஸ்வத்தாமா கேரக்டரில்  நடித்துள்ளார். இவரது தோற்றம் வெளியாகிய மிகவும் வைரலானது. பார்ப்பதற்கு கிரேக்க கடவுள் போல் இருக்கும் அவரின் தோற்றம் பிரம்மிக்க வைத்துள்ளது.


இந்த நிலையில் தற்போது கல்கி 2898 ஏடி படத்தில் அமிதாபச்சன் எவ்வாறு அஸ்வத்தாமவாக மாறினார் என்பது தொடர்பில் பிரபல ஒப்பனைக் கலைஞர் பிரீதிஷீல் சிங் சில விஷயங்களை கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், அமிதாபச்சனுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அஸ்வத்தாம மிகவும் சுவாரஸ்யமான கேரக்டர் என்பதால் அவர் எப்படி இருக்க வேண்டும் என்று படக் குழுவினர் என்னிடம் தெளிவாக சொல்லியிருந்தது. அதன்படி அவரை நாங்கள் தோற்றப்படுத்தினோம். அவரை மிகவும் வயதான தோற்றத்திலும் அவரை சுற்றி இருந்த அனைத்தும் இருளாகவும் உருவாக்கினோம்.




Advertisement

Advertisement