• Apr 27 2025

4 வாரங்களில் வசூல் சாதனை படைத்த "சாவா" திரைப்படம்...! எவ்வளவு தெரியுமா?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புயலாக காணப்படும் திரைப்படமாக ‘சாவா’ உள்ளது. இதில்  நடிகர் விக்கி கவுஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் வெளியான 4 வாரங்களில் 500 கோடியை தாண்டிய வசூல் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இயக்குநர் ஹேமந்த் நாராயணன் இயக்கிய ‘சாவா’ திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பை பெற்றுள்ளது. பல திரைப்படங்கள் கடந்த வாரங்களில் திரைக்கு வந்திருந்தாலும் ‘சாவா’ தனித்துவமான கதையமைப்பு மற்றும் விக்கி கவுஷல், ராஷ்மிகா ஆகியோரின் நடிப்பு , திரைக்கதை ஆகியவை ரசிகர்களிடம் பிரமாண்டமான ஆதரவை பெற்றுள்ளது.


மேலும் ‘சாவா’ திரைப்படம் முதல் வாரத்தில் 150 கோடியைப் பெற்று பின்னர் வேகமாக வசூலில் மாற்றத்தைப் பெற்றுக்கொண்டது. அத்துடன் தற்போது 500 கோடியை தாண்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது. இது இந்திய சினிமாவில் அதிகளவு வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள  திரைப்படம் என்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவிலிருந்து பல்துறை பிரபலமாக வளர்ந்து வருகின்றார். அவர் நடிப்பு , காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு, விக்கி கவுஷலும், ராஷ்மிகாவும் பாக்ஸ் ஆபீஸில் மாஸ் ஜோடியாக மாறியுள்ளனர்.

Advertisement

Advertisement