• Jul 18 2025

ஜெனியின் சாதனையை முறியடித்த BTS உறுப்பினர்...!யார் அந்த BTS பாடகர் தெரியுமா?

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் தென்கொரியாவைச் சேர்ந்த BTS  இசைக்குழு ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. இந்த இசைக்குழுவில்  ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்கள் உறுப்பினர்களாக  காணப்படுகின்றார்கள்.  இவர்கள் தங்களின்  குரலாலும், நடனத்தாலும், உற்சாகமூட்டும் பாடல் வரிகளாலும், பலரது மனங்களையும் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் ஜே-ஹோப்  தனது பாடல் மூலம்  சாதனை ஒன்றினை படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


BTS-ன் ரசிகர்கள் உலகளாவிய ரீதியில் காணப்படுகின்றார்கள். உறுப்பினர்களும் மீண்டும் எப்போது ஒன்றாக இசை ஆல்பத்தை வெளியிடுவார்கள், இசை நிகழ்ச்சி நடத்துவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.  இந்த BTS இசைக்குழு  போன்று பிளாக்பிங்க் என்ற இசைக்குழுவும் அங்கு காணப்படுகின்றது. இந்த குழுவில் உறுப்பினர்கள் ஜிசூ கிம், ஜென்னி கிம், லாலிசா மனொபன் மற்றும் ரோசன்னே பார்க் ஆகியோர் உள்ளனர். இவர்களுடைய பாடல்களுக்கும் தனி ரசிகர்கள் உலகெங்கும் காணப்படுகின்றார் . 


 தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிளாக்பிங்க் இசைக்குழுவைச் சேர்ந்த ஜென்னி கிம் ஒரு சாதனை படைத்திருந்தார். அதாவது   நடப்பாண்டு யூடியூப்பில்  இந்த மைக்கல் எட்டிய கொரியன் என்ற பாடல் சில மணிநேரத்தில் அதிக பார்வையாளர்களை  பெற்று சாதனை படைத்து இருந்தது . தற்போது BTS இசைக்குழுவை சேர்ந்த ஜே-ஹோப் பாடல் ஒன்றை பாடி வெளியிட்ட " killin'It Girl "  என்ற வீடியோ 43 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து  சாதனை படைந்துள்ளது. இத் தகவல்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 


Advertisement

Advertisement