• Apr 27 2025

எழில் சொன்ன குட் நியூஸ்.. கடும் அப்செட்டில் ஈஸ்வரி.. ராதிகா போனில் சொன்ன விஷயம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்த எழில் தனக்கு டைரக்டர் புது பிளாட் வாங்கி தந்ததாக இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றார். இதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷம் அடைய ஈஸ்வரி மட்டும் அப்செட்டான  நிலையில் காணப்படுகின்றார்.

மேலும் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனக்கு பிளாட் வாங்கி தந்ததாகவும் பாதி காசை தான் அவர் கட்டினார் மீதி காசை நான்  தான் கட்ட வேண்டும் என்று சொல்ல, எல்லாரும் பாராட்டுகின்றார்கள்.

இன்னொரு பக்கம் இனியாவும் ஆகாசும் போனில் பேசிக்கொண்டு இருந்ததோடு பின்னேரம் மீட் பண்ணுவதற்கும் பிளான் போடுகின்றார்கள். இதன்போது ஆகாஷ் செல்வி இடமும் இனியா பாக்யாவிடமும் மாட்டிக் கொள்கின்றார்கள். எனினும் ஒரு மாதிரி சமாளித்து விடுகின்றார்கள்.


மறுநாள் ஈஸ்வரி எழிலை அழைத்து நீ புது பிளாட்டுக்கு போக போறியா? அங்கு போக வேண்டாம் அதனை வாடகைக்கு கொடுத்து விட்டு மீண்டும் வீட்டுக்கே வருமாறு சொல்லுகின்றார் ஆனாலும் இதற்கு பாக்கியா மறுப்பு தெரிவிக்கின்றார்.

எனினும் ஈஸ்வரி தொடர்ந்து வாக்குவாதம் பண்ண எழிலை போக சொல்லிவிட்டு ஈஸ்வரி இடம் தனது பிள்ளைகளை என்னுடன் வைக்கும் எண்ணம் எனக்கு இல்லை அவர்கள் அவர்களுடைய உலகத்திலேயே இருக்கட்டும் என்று சொல்ல, நீ பிற்காலத்தில்   தனியாவா இருக்க போகிறாய் என்று ஈஸ்வரி கேட்க, என்னால் தனியாக இருக்க முடியும் என்று பதிலடி கொடுக்கின்றார்.

இறுதியில்  பாக்யா ரெஸ்டாரண்டில் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் ராதிகா போன் பண்ணி எழிலின் படத்தை தனது ஆபிஸில் உள்ளவர்கள் பார்த்து புகழ்ந்ததாகவும் தனக்கு பெருமையாக இருந்ததாகவும் சொல்கின்றார். பின்பு  மயூ பாக்யாவுடன் வீடியோ காலில் பேசுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement