• Jul 21 2025

" இங்க இப்போ ஜெசி ஜெசி சொல்லலே வேற சொல்லுது.." கல்யாண அப்டேட் கொடுத்த சிம்பு

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு தொடர்ச்சியாக பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். அந்த வரிசையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் " thugh life " படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. மேலும் சிம்புவுடன் இணைந்து கமல் , திரிஷா நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


மேலும் இவர் அடுத்தடுத்து 'பார்க்கிங்' பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் STR 50, மேலும் 'டிராகன்' பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR 51 ஆகியவை தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா பகுதி ஒன்றினை vtv கணேஷ் மற்றும் சிம்பு இணைந்து ரீ கிரியேட் பண்ணிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் கணேஷ் சிம்புவை பார்த்து இங்க இன்னா சொல்லுது ஜெசி ஜெசின்னு சொல்லுதா என கேட்க சிம்பு இப்பல்லாம் இங்க ஜெசி ஜெசி சொல்லல வேற ஒன்னு சொல்லுது வா அப்புறம் சொல்றேன் என கூறியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து "தலைவனுக்கு கல்யாணம் ஆஹா" போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement