நடிகர் சசிகுமார் மற்றும் சிம்ரன் முதன் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி இந்த படத்தினை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜிவிந் இயக்கியுள்ளார். பல பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி இருந்தாலும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பலராலும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த படத்தின் சிறப்பு என்னவெனில் இலங்கை தமிழரின் பேச்சு வழக்கு சொற்கள் பயன்படுத்தப்படுள்ளது.
மேலும் இந்த படம் தெனாலி 2 படத்திற்காக எழுதப்பட்ட கதை என சமீபத்தில் இயக்குநர் கூறியிருந்தார். படத்தில் அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளனர்.இந்த நிலையில் தற்போது இயக்குநர் படம் குறித்து பேசியுள்ளார்.
அவர் "நாங்க குடும்பத்தோட படம் பாக்க போனோம் எனக்கே படத்துக்கு டிக்கெட் கிடைக்கல ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் எல்லா இடத்திலேயும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு எல்லோருக்கும் நன்றி " என கூறியுள்ளார். மேலும் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Listen News!