பிரபல டிக்டாக் மற்றும் இன்ஸ்டா புகழ் பெற்ற நடிகை இந்திரஜா, தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். அவரது சமீபத்திய வீடியோவில், திருப்பூர் அருகிலுள்ள வாராகி அம்மன் கோயிலை பற்றி பேசினார். "சித்தரின் அருள்வாக்கால் தேங்காய், குழவிக்கல் தானாக சுழல்கின்றன" என்ற காணொளி பதிவுடன், கோவிலுக்காக நன்கொடை கேட்டு கியூஆர் கோடும் பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோ பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "அம்மனுக்கே ப்ரமோஷனா?" என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. சிலர் இதனை தெய்வீக நம்பிக்கையை பணமாக்கும் முயற்சி என கடுமையாக விமர்சிக்கின்றனர்.
முன்பும் இந்திரஜா, தனது ஆறு மாத குழந்தையை ஒரு கல்வி நிறுவனம் சார்ந்த வீடியோவில் காண்பித்ததற்காக எதிர்பாராத விமர்சனங்களை சந்தித்தார். அந்த நேரத்தில் “குழந்தையை வைத்து சம்பாதிக்க வேண்டுமா?” என்ற கேள்விகள் எழுந்தன.
தற்போது வாராகி அம்மன் கோவில் வீடியோ வழியாகவும், இந்திரஜா மீதான சர்ச்சை தொடர்கிறது. சிலர் அவரது பக்தியை பாராட்டினாலும், பெரும்பாலானோர் இது "தெய்வ விஷயத்தை மொனிடைஸ் செய்வது" என கூறுகின்றனர்.
Listen News!