நடிகர் அஜித் குமார், திரையுலகில் நடிப்பதை ஒரு தொழிலாக மட்டுமே பார்க்கிறார். ஆனால், அவரின் உண்மையான ஆர்வம் கார், பைக், ரேசிங், துப்பாக்கி சூடு, ரிமோட் ஹெலிகாப்டர் ஆகியவற்றில் இருக்கிறது. தனது முதல் படம் ‘அமராவதி’யில் பெற்ற 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் கூட அவர் பைக் வாங்கியதுதான் முதல் செயல்.
அஜித் தற்போது துபாய் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கார் ரேஸ்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதையடுத்து, தனது சம்பளத்தை 180 கோடியாக உயர்த்தியுள்ள அஜித், அதற்கு காரணமாக தனது கார் ரேஸிங் நிறுவனத்தின் செலவுகளைச் சொல்கிறார்.
அஜித் நிறுவியுள்ள ரேஸிங் நிறுவனம், இளைஞர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து, அவர்களை உலகளாவிய கார் ரேஸ்களில் பங்கேற்க வழிவகுக்கிறது. பயிற்சி, விமான டிக்கெட், தங்கும் வசதி, உணவு ஆகிய அனைத்திற்கும் அஜித்தின் நிறுவனம் தான் செலவழிக்கிறது. இதுவரை 60 பேர் இந்த நிறுவத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்தச் செலவுகளை சமாளிக்கவே தனது சம்பளத்தை குறைக்க அஜித் மறுக்கிறார் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால், அவர் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு தயாரிப்பாளர்கள் பின்னடைவுசெய்தாலும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அஜித்தின் இந்த முயற்சி, அவரை வெறும் நடிகராக அல்லாது, சமூக பொறுப்புள்ள ஒருவராகவும் காட்டுகிறது.
Listen News!