• Sep 10 2025

துல்கரின் பான் இந்தியா படத்தில் ஹீரோயினி இவரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

துல்கர் சல்மானின் 41வது திரைப்படமான DQ41 ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த திரைப்படத்தை, SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இயக்குநராக ரவி நெலக்குடிடி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


DQ41 ஒரு சமகால காதல் கதையை மையமாகக் கொண்டு, உணர்வுமிகுந்த நாடகத் தன்மையுடன் உருவாகிறது. இத்திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, அனய் ஓம். கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்கிறார்.


DQ41, SLV சினிமாஸ் தயாரிக்கும் பத்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய பான் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும். சமீபத்தில், இப்படத்தின் முக்கிய தகவலாக, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படக்குழு வெளியிட்ட வீடியோவில், துல்கர் மற்றும் பூஜாவின் இணையம் பெரிய திரையில் “மேஜிக்” உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


DQ41 பற்றிய மேலும் தகவல்கள், நடிகர்கள் மற்றும் குழுவின் மற்ற உறுப்பினர்கள் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement