தமிழ் சினிமாவில் தற்போது பெரிய அளவில் கவனம் பெறும் நட்சத்திரமாக மாறியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது எளிமையான நடிப்பு, நேர்த்தியான திரைக்கதை தேர்வுகள் மற்றும் குடும்ப ரசிகர்களிடையே கொண்ட பிரபலத்தால், இன்று எந்த தயாரிப்பாளரும் எதிர்பார்க்கும் ஒரு நம்பகமான ஹீரோவாக வளர்ந்துள்ளார்.
சமீபத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படம் அவரை வித்தியாசமான கதாபாத்திரங்களையும், கதைகளையும் தேர்வு செய்யும் ஒரு ஹீரோவாக மாற்றியுள்ளது.
இதைவிட முன்னதாக வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்ற படமாக பார்க்கப்படுகிறது. அந்தப் படத்தில் அவரது மிகுந்த முயற்சி, திடமான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, பல படங்களில் கமிட் ஆகி இன்று மிக பிஸியான நடிகராக வலம் வருகிறார்.
இப்போது அவருடைய அடுத்த படம் பராசக்தி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, சிபிச் சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு, மற்றும் குட் நைட் பட இயக்குனர் வினாயக் ஆகியோர்களுடன் பணியாற்ற உள்ளார்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் நட்பு குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிவிழாவில், தனுஷ் மேடையில் கூறிய உணர்ச்சிபூர்வமான பேச்சு அனைவரின் மனதையும் உருக்கி விட்டது.
தனுஷ் அந்த மேடையில் கூறியதாவது “சிவா எனக்கு தம்பி, நண்பர், அதுக்கும் மேலானவர். அவர் எதையும் செய்யட்டும், நான் எப்போதும் கூட இருப்பேன். உங்களை நம்புறேன், உங்கள்கிட்ட நான் ஒரு அன்பு வைக்கிறேன், ஏன் வைக்கிறேன் எனக்கே தெரியல. ஆனால் அது உண்மை.” எனத் தெரிவித்திருந்தார்.
Listen News!