• Jul 18 2025

’கூழாங்கல்’ பட தயாரிப்பு நிறுவனத்திற்காக இணைந்த விஜய் சேதுபதி - சூரி.. வைரல் வீடியோ..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து ’விடுதலை’ படத்தில் நடித்த நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தின் டைட்டில் லுக் வீடியோவை தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் நயன்தாராவின் ’ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனம் வெளியிட்ட திரைப்படம் கூழாங்கல். இந்த படம் உலகின் பல சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை குவித்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’கூழாங்கல்’ தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த திரைப்படம் ’ஜமா’. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் லுக் வீடியோ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோவை விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கன்னடத்தில் வெளியாகி தமிழ் உட்பட இந்தியாவின் பல மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆன ’காந்தாரா’ படம் போல் ’ஜமா’ படத்தின் டைட்டில் டீசர் இருப்பதாக பலர் கமெண்ட்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் அம்மு அபிராமி மற்றும்  சேட்டன் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..


Advertisement

Advertisement