• Jul 23 2025

நஸ்ரின் பாடலுக்கு மயங்கிய கலெக்டர்..! நெகிழ்ச்சியில் கொடுத்த Gift-ஐ பாருங்களேன்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சி, பல ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்துவந்த நிகழ்ச்சியாகத் திகழ்கின்றது. சிறுவர் பாடலரங்கத்தில் உச்சத்தை தொட்ட இந்த நிகழ்ச்சியின் ஜூனியர் சீசன் 10 சமீபத்தில் மிகவும் பரபரப்பாக முடிவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக காயத்ரி தேர்வாக, முதல் ரன்னர் அப் இடத்தை ராணிப்பேட்டையை சேர்ந்த நஸ்ரின் பெற்றிருந்தார்.


இந்நிலையில், மக்கள் மனதில் இடம்பிடித்த நஸ்ரின் மீது, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாராட்டு மழை பொழிந்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ஃபினாலே நிகழ்ச்சியில், நஸ்ரின் தனது பாடல் தேர்வு, குரல்வளம் என்பவற்றால் ரசிகர்களை பூரணமாக கவர்ந்திருந்தார்.


அதற்கிடையில், காயத்ரி டைட்டில் ஜெயித்தாலும், நஸ்ரின் பெற்ற பாராட்டுகள் ஒரு வெற்றியாளருக்குக் கிடைக்கும் அளவுக்கு இருந்தது என்பது உண்மை. இந்த நிகழ்வின் பின், நஸ்ரினின் நிலையை மனதளவில் புரிந்த ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்துப் பாராட்டி, திருக்குறள் புத்தகம் ஒன்றை பரிசாகவும் வழங்கியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது யூடியூபில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement